Srilanka Breaking News Humanitarian Disaster unfolding in Srilanka



சீமான், அமீர் தேர்தலில் போட்டி?
திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் முடிவு
திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் நாளை பிலிம் சேம்பர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிராஜா தலைமை ஏற்கிறார். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் முழுமையாக இதில் கலந்து கொள்கிறது. திரையுலகை சேர்ந்த மற்ற சங்கங்கள் ஆதரவு தரவும் இசைந்துள்ளன.

இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாரதிராஜா, உண்ணாவிரத அறப்போராட்டம் என்றெல்லாம் இனியும் எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்ள முடியாது. அகிம்சையில் பிறந்த காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி, இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை வேடிக்கை பார்ப்பது சகிக்க முடியாத அவமானம். எங்களின் போராட்டத்தை சோனியாவே தீர்மானிக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகளிலும் இயக்குனர்கள் சங்கம் அந்தந்த வேட்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறது. போராட்டத்திற்கு இன்னும் வலு சேர்க்கும் விதமாக சிறையிலிருந்து வெளியே வரும் சீமானையும், அமீரையும் கூட தேர்தலில் போட்டியிட வைப்பதென்ற முடிவில் இருக்கிறதாம் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்

About the author

wearecephalization

2 Comments

  • சீமான், அமீர் தேர்தலில் போட்டி? திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் முடிவு திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் நாளை பிலிம் சேம்பர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது

Leave a Comment